தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 1000 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .அதில், ‘‘மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் உத்தரவுபடி, இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கு தேசிய கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் ஏராளமானவர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை. எனவே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தகுதி தேர்வில் வெற்றி பெற மத்திய அரசு 5 ஆண்டு அவகாசம் அளித்துள்ளது. விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். எந்த தடையும் விதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக