நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 06, 2012

பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு 

ஆசிரியர் பயிற்சி படிப்பாக பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnteu.in பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வெழுதிய மாணவ, மாணவியர், மதிப்பெண் பட்டியல், தற்காலிக தேர்ச்சி சான்றிதழ்களை அவரவர் படித்த கல்லூரி முதல்வர்களிடம் இருந்து ஜனவரி 7ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வரும் மே, ஜுன் மாதங்களில் நடைபெறும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
அவரவர் படித்த கல்லூரி முதல்வர்களிடம் இருந்தே விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மார்ச் 9ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அந்தந்த கல்லூரிகளில் சேர்த்துவிட வேண்டும். மார்ச் 19ம் தேதி வரை அபராதத் தொகையுடன் சேர்த்து விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்