நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 29, 2011

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு புதிதாக 70 தேர்வு மையம்

2012, மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு புதிதாக 70 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியர் சுமார் 7 லட்சம் பேர், 1,960 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியான நிலையில், தேர்வு மையங்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களுக்கான அனுமதி கோரி இந்த முறை 100க்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவற்றில் பொதுத் தேர்வு நடத்துவதற்குத் தேவையான வசதிகளும், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, போக்குவரத்து வசதிகள் ஆராயப்பட்டு பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் பணி நடைபெற்றது.
விண்ணப்பித்த 100 பள்ளிகளில் 70 பள்ளிகளுக்கு அனுதி வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களோடு சேர்த்து இந்த 70 புதிய தேர்வு மையங்களிலும் இம்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டில் 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் 1,960 தேர்வு மையங்களில்  தேர்வெழுத உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்