நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 22, 2011

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் குறைப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்வில் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


வரும் 2012 ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு தேர்வெழுத சுமார் 10 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
சமச்சீர் கல்வி துவங்கி முதல் முறையாக அனைத்து பாடத்திட்ட மாணவர்களும் தேர்வெழுத இருப்பதால் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தேர்வெழுதும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கிறது. தனியார் மற்றும் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் தேர்வுக்குரிய கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். அந்த மாணவர்களுக்கும் அரசு நிர்ணயித்த அதே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் எந்தவித மாறுபாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அறிவியல் பாடத்தில் 2 செய்முறை தேர்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ரூ.225 தேர்வுக் கட்டணமாக வசூலிக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
தேர்வுகள் குறித்து பணிகள் ஏறக்குறைய நிறைவு பெற்றதால் தற்போதைக்கு தேர்வு கட்டணத்தில் எந்தவித மாற்றமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்