நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 23, 2011

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான நேர்காணல் - 2012

அரசு பள்ளிகளில், 786 பகுதிநேர சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு, 1,867 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல்கட்டமாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நேர்காணல், வரும் 26ம் தேதி துவங்க உள்ளது.
தமிழக அரசு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில், 786 பகுதிநேர சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, 262 உடற்கல்வி ஆசிரியர்கள், 250 கலை ஆசிரியர்கள், இசை, தையல், தோட்டக்கலை, கணினி பயன்பாடுகள், வாழ்வியல் திறன் மற்றும் பேச்சுத்திறன், கட்டுமானப்பணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, 274 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, மாத சம்பளமாக, 5,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும். பணி நியமனம், எக்காரணத்தைக் கொண்டும் நிரந்தரம் செய்யப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், நியமனம் ரத்து செய்யப்படும். இப்பணியிடங்கள் நேர்காணல் முறையில் நியமனம் செய்யப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களிடமிருந்து, நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு, 498 பேர், கலை ஆசிரியர் பணிக்கு 385 பேர், தொழிற்கல்வி பிரிவில் இசை ஆசிரியர் பணிக்கு 74 பேர், கணினிபயன்பாடு ஆசிரியர் பணிக்கு 332 பேர், தையல் ஆசிரியர் பணிக்கு, 441 பேர், தோட்டக்கலை ஆசிரியர் பணிக்கு ஒருவர், கட்டுமானப்பணி ஆசிரியர் பணிக்கு 3 பேர், வாழ்வியல் திறன் மற்றும் பேச்சுத்திறன் பணிக்கு ஒருவர் மற்றும் இதர என, 1,867 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில், முதல்கட்டமாக, உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல், வரும் 26, 27 மற்றும் 28ம் தேதி, தினமும் 150 பேர் வீதம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பாணைகள், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, மற்றப் பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்