சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை நேரில் பார்வையிட்டு, அரசுக்கும், தேர்வுத்துறைக்கும் அறிக்கை அனுப்புவதற்காக, 20 இணை இயக்குனர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும், மாவட்டங்கள் பிரித்து, பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மார்ச் 2ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வுகளும், அதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெறுகின்றன. தேர்வில், முறைகேடுகளோ, மாணவர்கள் பாதிக்கும் வகையில், எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படக்கூடாது என, ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வுப் பணிகள் முழுவதையும், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அரசுக்கும், தேர்வுத்துறைக்கும் அறிக்கை அனுப்புவதற்காக, கல்வித்துறை, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்க கல்வித்துறை, மெட்ரிகுலேஷன், பொது நூலகத்துறைகளைச் சேர்ந்த, 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
GET IDEA GET INFO WEBSERVICES: THIS IS FOR ALL PEOPLE WHO SEEKING FOR THE BEST DEAL,PROMOTIONS,OFFERS,LOOT AND TRICK AND TIPS BASED SOCIAL NETWORKS.. TRY AND GET BENEFITS
பிப்ரவரி 13, 2011
பொதுத்தேர்வு பணிகளை நேரில் பார்வையிட 20 அதிகாரிகள் நியமனம்
தலைப்பு :
பொது தகவல்,
மாணவர்கள் பகுதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக