நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 13, 2011

தகுதியற்ற 44 பல்கலைகளின் கருத்து கேட்க 3 பேர் குழு அமைப்பு

மத்திய அரசால் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்க 3 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மனிதவளத் துறையின் கூடுதல் செயலர் ஏ.எஸ். தாக்கூர், மற்ற 2 கூடுதல் செயலர்கள் சுனில் குமார் மற்றும் என்.கே. சின்ஹா ஆகியோரே இந்த 3 பேர் கமிட்டியின் உறுப்பினர்கள். இந்த கமிட்டி மனிதவளத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் அந்த 44 தகுதியற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் மனிதவளத் துறை நோட்டீஸ் அனுப்பியது நினைவிருக்கலாம். அந்த பல்கலைகளின் பதிலை ஆய்வுசெய்தப் பிறகு, இந்த 3 பேர் கமிட்டியானது தனது அறிக்கையை, நிபுணர்கள் அடங்கிய மதிப்பாய்வு குழுவிற்கு அனுப்பும். இந்த மதிப்பாய்வு குழுதான் அந்த 44 பல்கலைகளின் தகுதியின்மையை கண்டுபிடித்தது.

அந்த 44 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது தொடர்பான தனது முடிவை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கடந்த ஜனவரி 11ம் தேதி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்