செல்போன் எண்ணை மாற்றாமலே தொலைபேசி நிறுவனத்தை விருப்பம் போல் மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் 20.01.2011 முதல் அமலுக்கு வந்தது
இந்த வசதியை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். ஏற்கனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது செல்போன் இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
எப்படி மாற்றுவது?
* செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முதலில் UPC (Unique Porting Code) என்கிற எண்ணைப் பெறவேண்டும்.
* அதைப் பெறுவதற்கு செல்போனில் இருந்து PORT <space> செல்போன் எண் என டைப் செய்து 1900 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணம்: PORT 900000001
* எட்டு இலக்க யுபிசி எண் கிடைக்கும். அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
* இந்த எண்ணை எடுத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் புதிய சேவை நிறுவன மையத்துக்குச் சென்று அங்கு தரப்படும் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பித் தர வேண்டும்.
* இதன் பிறகு புதிய சேவை நிறுவனம் புதிய சிம் கார்டு வழங்கும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம்.
* அந்த சிம்கார்டு செயல்படத் துவங்கும் நேரத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும்.
குறிப்புகள்
* சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு தொழில்நுட்பங்களில் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தாலும் மற்ற தொழில்நுட்பத்துக்கு மாறிக் கொள்ள முடியும்
* அதேபோல் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களுக்கு இடையேயும் மாறிக்கொள்ளும் வசதி உண்டு
* இந்தச் சேவைக்கு கட்டணமாக புதிய சேவை நிறுவனம் அதிகபட்சமாக ரூ.19 வரை வசூலிக்கும். போட்டியின் காரணமாக இந்தக் கட்டணம் ரத்து செய்யப்படலாம்.
* ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியும். அதாவது சென்னையில் உள்ள எண்ணை தில்லியில் உள்ள நிறுவனத்துக்கு மாற்ற முடியாது.
அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் விரும்பும் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால் சேவை நிறுவனம் மாற்றித் தரப்படும். இதற்கான கட்டணமாக 19 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சேவை நிறுவனத்தை மாற்றும்போது தங்களது இருப்புத் தொகையை மாற்றிக் கொள்ள முடியாது.
ஆனால் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
இது தவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும். எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
கடந்த நவம்பரில் இந்த வசதி ஹரியானாவில் அறிமுகம் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக