கடந்த 2008, ஜூலை பருவத்திற்கான எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்களின் முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது.
அவை, வினியோக மையங்கள் மூலம் வழங்கப்பட்டன. மதிப்பெண் பட்டியலை நேரில் பெறாதவர்களுக்கு, 30 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமுகவரியிட்ட தபால் உறையில் அனுப்பப்பட்டன. இவ்வாறு நேரில் சென்று பெறாதவர்கள், சுயமுகவரியிட்ட தபால் உறை வழங்காதவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், வினியோக மையங்களில் இருந்து, அரசு தேர்வுகள் துறையின் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதைப் பெற, முன் போலவே ஸ்டாம்ப் ஒட்டி, சுயமுகவரியிட்ட தபால் உறையை அனுப்பும்படி அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னும் பலர் மதிப்பெண் பட்டியல் பெறாமல் உள்ளனர். விதிமுறைப்படி, தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து அவை அழிக்கப்பட வேண்டும்.
எனவே, இந்தச் செய்தி வெளியாகும் நாளில் இருந்து, 15 நாட்களுக்குள், மதிப்பெண் பட்டியலை பெற, 30 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமுகவரி எழுதிய தபால் உறையை, மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக