நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

டிசம்பர் 15, 2011

கல்வி உதவித் தொகை

தமிழகத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், விவசாய தொழில் செய்பவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டதாகும். இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


அதன்படி, ஐடிஐ, பாலிடெக்னிக், கவின்கலை ஆசிரியர் பயிற்சி, செவிலியல் படிப்பு, இளங்கலை, முதுகலை, பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, தொழில்கல்வி பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறலாம்.
தகுதி வாய்ந்த மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் படிப்பதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை பெற்று அவரவர் தாலுகாவில் உள்ள உழவர் பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்