நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

நவம்பர் 30, 2011

எழுத்துத் தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு

முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை: முதுகலை ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
இந்த முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து மட்டும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
தற்போது, எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டதன் மூலம், குழப்பம் தீர்ந்துள்ளது. புதிய முறையில், விரைவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

நன்றி: தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்