நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

பிப்ரவரி 13, 2011

ஆசிரியர் பயிற்சி தேர்வு: சான்றிதழ் வினியோகம்

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த ஜூன் 2010ல் நடந்த ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு, இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள், தேர்வெழுதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் 12ம் தேதி (இன்று) பெற்றுக் கொள்ளலாம்.

மதிப்பெண் மற்றும் தர நிலை சான்றிதழ் கிடைத்து பட்டய சான்றிதழ் கிடைக்காதவர்கள், தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். சிறப்பு தேர்வு கட்டணம் 1,000 ரூபாய் செலுத்தி, கடந்த ஜூனில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டல் விண்ணப்ப விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்