நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 21, 2011

பயன்படுத்தாத அரசு பள்ளி கணினிகள்

"அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, 50 சதவீதம் கூட முறையாக பயன்படுத்துவது இல்லை,'' என, அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
கல்வித்துறை பணிகள் குறித்து தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தேனியில் ஆய்வு நடத்தினார். அவர் கூறியதாவது: சமீபகாலமாக உங்கள் மாவட்டங்களில் வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் காலமாக இருப்பதால், அரசுக்கு தலைவலி ஏற்படுத்தும் வகையில் தவறுகள் நடக்காமல், கண்காணிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, 50 சதவீதம் கூட முறையாக பயன்படுத்துவது இல்லை என, புகார்கள் வருகின்றன. மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாக பணிக்கு செல்வதில்லை. பலர், பதிலி ஆசிரியர்களை பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. அது போன்ற தவறுகள் செய்யும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்