நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 10, 2011

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. நடத்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இரண்டு தேர்வுகளுமே வரும் மார்ச் 1 ஆம் தேதி துவங்குகின்றன. அதேசமயம் 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 25 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13 ஆம் தேதியும் முடிகின்றன.

கண்டிநியூயஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவாலுவேஷன் (சி.சி.இ) சிஸ்டம் காரணமாக, கடந்த வருடம் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் விருப்பமுறையை சி.பி.எஸ்.சி. வழங்கியிருந்தது. தற்போது நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8,23,125. அதில் 2,73,538 மாணவர்கள் வாரியத் தேர்வினை எழுத உள்ளார்கள். எஞ்சிய மாணவர்கள், ஏப்ரல் மாதம் சி.சி.இ. நடத்தும் பள்ளி அடிப்படையிலான வருட இறுதியிலான சம்மேடிவ் 11 தேர்வுகளை எழுதுவார்கள்.

10 ஆம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை http://cbse.nic.in/DSHT10AM_2011.pdf என்ற இணைப்பில் கிடைக்கிறது.

12 ஆம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை http://cbse.nic.in/DSHT12AM_2011.pdf என்ற இணைப்பில் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்