கெட் ஐடியா கெட் இன்போ நடத்தும் -
"சிறந்த அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதுகள் - 2011"
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதி கவிதைக்கு ஏற்ப
நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது. என்கிறது கோத்தாரிக் கல்விக் குழு.
ஒரு நல்ல ஞானாசிரியனால்தான் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர்,
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்” என்பர். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.
இப்படிப்பட்ட பண்பு நலன்களைக்கொண்ட உங்கள் பள்ளியில் பணியாற்றும் அல்லது பனி ஓய்வு பெற்ற அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள் புகழ் உலகம் அறியவும், அவர்களை கௌரவிக்கவும் நம் தளம் சிறந்த மேடையாக அமையவுள்ளது.
- "அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதுகள்" பங்கேற்கும் விதி முறைகள் :
- பணிபுரியும் அல்லது பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்காகவும், பள்ளிக்காகவும், சமுதாயத்திற்கும் செய்த அர்ப்பணிப்புள்ள நிகழ்ச்சிகளை விரிவான கட்டுரையாக எங்களுக்கு எழுதி அனுப்பவும். மேலும் சிறந்த சேவை புரிந்த உங்கள் ஆசிரியர்களை கௌரவிக்க அவர்களைப்பற்றி எங்களுக்கு கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டும்.
- அனுப்பும் அனைத்து ஆசிரியர்களின் கட்டுரைகளும் நம் தளத்தில் பிரசுரிக்கப்படும்.
- இறுதியாக சிறந்த அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் விருதுகள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக