நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 02, 2011

சமச்சீர் கல்வி - பாடப் புத்தகங்கள் தயாரிப்புத்திட்டம்


சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களின், 'சிடிக்களை, நாளை மறுதினத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறைக்கு, பாடநூல் கழகம் "கெடு' விதித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில், 2,3,4,5,7,8,9, 10 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வகுப்புகளுக்கு மொத்தம் 195 தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதில், மொழிப் பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடங்கள் 65 தலைப்புகளிலும், சிறுபான்மை மொழிப்பாட புத்தகங்கள் 130 தலைப்புகளிலும் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடப் புத்தகங்களில் இது வரை 43 தலைப்புகளுக்கான, "சிடி'க்களை மட்டும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் பள்ளிக் கல்வித்துறை ஒப்படைத்துள்ளது.

மீதமுள்ள 22 தலைப்புகளுக்கான, "சிடிக்களை, நாளை மறுதினத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என, பாடநூல் கழகம் "கெடு' விதித்துள்ளது. சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான, "சிடிக்களை, ஜனவரி 15ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டுக்காக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்காக ஒரு கோடியே 35 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. மீதமுள்ள வகுப்புகளுக்கு, ஐந்து கோடியே 58 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்த புத்தகங்களை, வரும் மார்ச் மாதத்திற்குள் அச்சிட்டு முடித்து, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப, பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்