நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 02, 2011

தஞ்சை தமிழ் பல்கலை.,யில் பி.எட் (B.Ed) விண்ணப்பங்கள் வழங்கல்

திருநெல்வேலி:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக தொலை நிலை கல்வி இயக்கக 2010-11ம் கல்வி ஆண்டிற்கான பி.எட் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இளங்கலை பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு கணிதம், உயிர் இயற்பியல், மின்னணுவியல், உயிர் வேதியியல், உயிர் நுட்பவியல், பயன்பாட்டு வேதியியல், பயன்பாட்டு புவியியல், தாவர உயிரியல், சுற்றுசூழல் அறிவியல், நுண்ணுரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப் படிப்பில் பொருளியல், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், இந்திய பண்பாடு, தர்க்கவியல், கம்ப்யூட்டர் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், உளவியல் ஆகிய பாட பிரிவில் தேர்ச்சி பெற்று பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகுதி உள்ளவர்கள்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 இல்லாமல் நேரடியாக இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருந்தால் பி.எட் படிப்புக்கு தகுதி கிடையாது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற தமிழ் பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி இயக்ககத்தில் நேரிலோ அல்லது பாளை ராமசாமி அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீரமணா கல்வி அறக்கட்டளையிலோ பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குனர், தொலை நிலை கல்வி இயக்ககம், தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - 613 010 என்ற முகவரிக்கு மட்டும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வரும் 14ம் தேதி கடைசி தேதியாகும்.மேலும் விபரங்களுக்கு 0462-2560339, 94434 73915, 98943 60839 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்