ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தப்பட்ட பாடங்களில், புதிய பாடங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், பள்ளியிலேயே செய்முறை பாடங்களை மாணவர்கள் செய்து முடிக்கும் வகையில், பாட திட்டம் அமைந்து வருகிறது. தற்போது, பாடங்களில் பிழைத் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் முதல் கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் மற்றும் பிழைகளை நீக்கி, திருத்தப்பட்ட புதிய பாடப் புத்தகங்களுக்கான, "சிடி'க்களை, பாடநூல் கழகத்திடம், ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஒப்படைத்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கான திருத்தங்கள் மற்றும் செயல்முறை பாடங்கள் அடங்கிய பாட புத்தகங்களின் முதல் தொகுதியை, பிப்ரவரியில் வழங்கிட, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக