நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 17, 2011

தினம் ஒரு துணுக்கு - "இந்திய ரிசர்வ் வங்கி"

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடமையாக்கியுள்ளது.
முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937 ம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் துவ்வூரி சுப்பராவ் ஆவார்.
  
செயல்பாடுகள் :
  • நாணயஞ் சார்ந்த அதிகாரம்
    • தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
    • வங்கிகளின் பணக்கையிருப்பு விகிதம் முறைப்படுத்துதல்
  • நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்
    • பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிதி சார்ந்த கோட்பாடுகளை வரையறுத்தல்
  • அன்னியச் செலாவணியை முறைப்படுத்துதல்
    • அன்னியச் செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், 1999 தின் படி முறைப்படுத்துதல்
  • இந்திய ரூபாய் நாணயம் அச்சிடுதல்
    • இந்திய ரூபாய் நாணயம் மற்றும் தாள் அச்சிடுதல், பழைய தாள்களை புதிய தாள்களுக்கு பரிமாற்றம் செய்தல், பழைய தாள்களை அழித்தல்
  • தேசிய முன்னேற்றத்தில் பங்கு
  • இதர பணிகள்
    • மத்திய மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக செயல்படல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்