நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 14, 2011

8.62 லட்சம் பேர் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு

மார்ச் 28ம் தேதி துவங்கும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை, எட்டு லட்சத்து 62 ஆயிரத்து 35 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 பேர் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவியர். இந்த ஆண்டு, எட்டு லட்சத்து 62 ஆயிரத்து 35 பேர் எழுதுகின்றனர். இவர்களில், மாணவர்கள் நான்கு லட்சத்து 24 ஆயிரத்து 549 பேர்; மாணவியர் நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர்.

கடந்த தேர்வை விட, இந்த தேர்வில் மாணவர்கள் 2,026 பேரும், மாணவியர் 3,043 பேரும் கூடுதலாக எழுதுகின்றனர். அதேபோல், மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 688 பேர் எழுதுகின்றனர். இவர்களில், 79 ஆயிரத்து 478 பேர் மாணவர்கள்; 65 ஆயிரத்து 210 பேர் மாணவியர். கடந்த தேர்வை விட, 14 ஆயிரத்து 668 மாணவர்கள், இந்த ஆண்டு கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். 3,000 மையங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களின் கருத்துக்கள்