நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜனவரி 19, 2011

தினம் ஒரு துணுக்கு - "3ஜி"

டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தின் முன்னோட்ட வெளியீடாக 2001ஆம் ஆண்டு மே மாதம், எப்ஓஎம்ஏ (FOMA) என்ற பெயரில் ஜப்பானில் என்டீடீ டொகோமோ நிறுவனம் வர்த்தரீதியான வெளியீட்டிற்கு முந்தைய முன்னோட்டமாக முதல் 3ஜி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது. பொதுவாக 3ஜி அல்லது 3வது தலைமுறை என்று அறியப்படும்  

சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது,
3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.

3ஜி சாதனங்கள் அல்லது அச்சேவை அளிப்போர்களிடம் இருந்து பயனர்கள் இந்தளவிலான டேட்டா விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்ற ஒரு தெளிவான வரையறையை இன்னும் ITU கொண்டு வரவில்லை. இவ்வாறு 3ஜி சேவையைப் பெற்ற பயனர்கள், ஒரு தரமுறையைக் குறிப்பிட்டு, இது குறிப்பிடும் விகிதத்தை இந்த தொழில்நுட்பம் எட்டவில்லை என்று கூறமுடியாது. ஒரு செய்தி விமர்சனம் குறிப்பிடுவதாவது: "IMT-2000 தொழில்நுட்பம் உயர்ந்த டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அளிக்கும்: அதாவது நிற்கும் அல்லது நடக்கும் பயனர்களுக்கு குறைந்தபட்சம் நொடிக்கு 2 மெகாபிட்ஸ் வேகத்திலும், நகரும் வாகனங்களில் நொடிக்கு 348 கிலோபிட்ஸ் வேகத்திலும் கிடைக்கும்" என்கிறது. குறைந்தபட்ச அல்லது சராசரி விகிதங்களையோ அல்லது எந்த மாதிரியான இன்டர்பேஸ்கள் 3ஜி சேவைக்கு பொருந்தும் என்றோ ITU தெளிவாக குறிப்பிடவில்லை, ஆகவே வாடிக்கையாளர்களின் பிராட்பேண்ட் டேட்டா எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு டேட்டா வேக விகிதங்கள் விற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்